Posts

இந்திய-சீன எல்லை மோதல்களில் இறந்த இராணுவ வீரர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.எல்லையில் உருவாகியுள்ள பதட்டங்கள் நாடுகளின் விரிவாக்க அபிலாஷைகளின் விளைவாகும் #அறிக்கை: மத்தியக்குழு,சி.பி.ஐ(எம்-எல்)நாடு என்றால் மண்ணை குறிப்பதல்ல, அந்த மண்ணில் உழைத்து, செல்வத்தை உற்பத்தி செய்து, மண்ணின் கலாச்சாரத்தை உருவாக்கும் மக்களை குறிக்கும் சொல்.. மக்களின் தேசிய உணர்வுகளை தேசியவெறி கொண்ட பேரினவாதமாக மாற்றக்கூடாது. அண்டை நாடுகளை தீயசக்திகளாக சித்தரிப்பதை தேசபக்தியுடன் இணைத்து பார்க்கும் பார்வை இருக்கக்கூடாது. இந்து வகுப்புவாதம் என்ற நாடகத்திரையை எழுப்பிய பாஜக தேசிய பேரினவாதம் என்ற திரைச்சீலையை உயர்த்தி வருகிறது. சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இரு நாட்டு மக்களும் இந்த நிகழ்ச்சிகளின் வளர்ச்சியை மிகுந்த கவனத்துடன் கவனித்து வருகின்றனர். இந்திய பெரு முதலாளித்துவத்தின் தலைமை அமைதியான சகவாழ்வுக்கான பஞ்சீலம் என்ற ஐந்து கொள்கைகளை காற்றில் வீசியெறிந்ததுடன், அணிசேரா நாடுகள் என்ற கொள்கையையும் கைவிட்டு ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக 1950-களில் செயல்பட்டது. இது தெற்காசியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பிடியை வலுப்படுத்திக் கொள்ளும் விருப்பத்திற்கு ஆதரவானதாகும்.மேலும், வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்பூச்சியாவில் தேசிய விடுதலை இயக்கங்களை அடக்குவதில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதியை இது விரிவுபடுத்தியது. அமெரிக்க வீரர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியா ஒரு நடிகையை அனுப்பியது. இவை இந்தியாவின் சீரமைக்கப்படாத அணிசேராக் கொள்கையின் தோரணையிலிருந்த வெற்றுத்தன்மையை அம்பலப்படுத்தியிருந்தன. 1962 ஆம் ஆண்டில், இ.பொ.க-விலிருந்து பின்னர் இ.பொ.க(மார்க்சிஸ்ட்) ஆக தங்களை அமைப்பாக்கிக் கொண்ட பெரும்பாலான பகுதியினர் இந்தியாவும் சீனாவும் எல்லை மோதலை அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.அப்போதைய இந்திய அரசாங்கம் சிபிஐ தலைவர்கள் 1600 பேரை சீனா சார்பு என்று முத்திரை குத்தியதுடன், அவர்கள் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் சீனாவை ஆக்கிரமிப்பாளராக முத்திரை குத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினர். சர்வதேச நோக்குநிலை மற்றும் பொறுப்புள்ள கம்யூனிஸ்டுகள் என்ற வகையில், இந்த தோழர்கள் அந்த நேரத்தில் சரியாக செயல்பட்டனர்.1960 வாக்கில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்தல், கொடுமைப்படுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் உறவாடி கெடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் புதிய காலனித்துவ கொள்கையை நடைமுறை படுத்தி வந்தது. சோசலிச அரசுகளை முதலாளித்துவ அரசுகளாக மாற்றி இழிவுபடுத்த பல சதிச்செயல்களை நாடியது. சோவியத் ரஷ்யாவில் முதலாளித்துவத்தை ஆதரித்த சில தலைவர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் சீனாவில் அத்தகைய தலைவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதை மிரட்டல் மூலம் அடிபணிய வைக்கும் முறையைக் கையாண்டது. அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட எல்லை மோதல்களுக்கு இதுவே மூல காரணம். இந்திய அரசின் பாதுகாப்பு சட்டம் ஏகாதிபத்தியத்தின் நவ காலனித்துவ சுரண்டலுக்கான ஒரு கருவியாக மாறியது.பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் அரசாங்கம் தேசபக்தர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தியது; உழைக்கும் மக்களிடம் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று சொன்னதுடன், கோரிக்கைகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் இல்லாமல் தொழிலாள வர்க்கத்தை மேலும் உழைக்குமாறு அறிவுறுத்தியது. இவ்வாறு "தேசியவாத, சோசலிச மற்றும் அமைதி நேசிக்கும்" நேரு அரசாங்கம் தரகு முதலாளித்துவ மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியவாதிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. சில சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் நேருவை ஒரு நண்பராக நம்பினர். ஆனால் அது ஒரு மாயை என்று நிரூபிக்கப்பட்டது.இது பல அறிவுஜீவிகளையும் ஜனநாயகவாதிகளையும் திகைக்க வைத்தது. பிந்தைய தசாப்தங்களில், இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா எல்லைகளில் பதட்டங்கள் எழுந்தாலும், அவை பேச்சுவார்த்தைகளால் தணிக்கப்பட்டன.அப்போதைய சீன அரசாங்கம் சோசலிசத்தை கட்டியெழுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. சோசலிச கொள்கைகளையும் கம்யூனிசத்தின் கொள்கைகளையும் சிதைக்கும் திசைதிருப்பும் சில நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக அது கருத்தியல் போராட்டத்தையும் நடத்தியது. இந்த நேரத்தில்தான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை மோதல்கள் நிகழ்ந்தன. இந்தியப் பிரதமர் நேருவுக்கும் சீனப் பிரதமர் சௌ- என்-லாயுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உழைக்கும் மக்களும் முற்போக்கு சிந்தனையுள்ள அறிவுஜீவிகளும் இருதரப்பும் பேச்சுவார்த்தைகளின் மூலம் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்பு வலுப்பெறும் என்றும் நம்பினர். ஆனால் நேருவின் முன்னேறிச் செல்லும் கொள்கை நாட்டை யுத்த சூழ்நிலைக்கு இட்டுச் சென்றது. அப்போதைய வெளியுறவு மந்திரி கிருஷ்ண மேனன் இரு நாடுகளுக்கிடையில் நட்பை நிலைநாட்ட கடுமையாக முயன்றார், ஆனால் அவர் முயற்சிகள் வீணாகின. பின்னர் அவர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.மோடி நடுவணரசில் ஆட்சிக்கு வந்த பிறகு, திருமதி சுஷ்மா ஸ்வராஜ் சீன அரசாங்கத்துடன் நட்புறவுக்காக முயற்சித்ததாகத் தெரிகிறது. பெய்ஜிங்கிற்கும் புதுடெல்லிக்கும் இடையில் பல அரசு பிரமுகர்கள் பயணம் மேற்கொண்டனர். மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, உள்துறை அமைச்சர் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிப்பது போன்ற பேச்சில் ஈடுபட்டார், இது தேசிய பேரினவாதத்தை தூண்டிவிடுவதற்கான பேச்சுகளாகும். ஜம்மு-காஷ்மீரை, காஷ்மீர் மற்றும் லடாக் எனப் பிரித்தது அம்மாநில மக்களை இந்து பெரும்பான்மை மற்றும் முஸ்லீம் பெரும்பான்மை பகுதிகளாகப் பிரித்தது. இதன் பொருள் மக்களை இனவாத அடிப்படையில் ஆழமாக பிளவுபடுத்தும் ஒரு கருத்தை மக்களிடையே சொருகி, தலைமுறை தலைமுறையாக ஒற்றுமையை வளர்த்த மக்களின் உழைப்பு மற்றும் வாழ்க்கை முறைக்கு ஓர் பலத்த அடியைக் கொடுப்பதாகும்.இன்றைய சீனா மாவோ மற்றும் சௌ-என்-லாயின் காலத்திலிருந்த சீனா அல்ல. அது இப்போது அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுடன் சந்தையில் பங்கு பெற போட்டியிடுகிறது. சோசலிசத்தை கட்டியெழுப்பும் போக்கில் வளர்ந்த கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தின் பாரம்பரியம் கொண்ட சீன மக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவும் சீன பொருட்களை இறக்குமதி செய்கிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அதிக கட்டணங்களை விதித்து அமெரிக்கா சீனாவை கட்டுப்படுத்த முயன்றது, இது சீனாவின் பதிலடி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. இது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போரைத் தூண்டியது. சந்தைகளுக்கான போராட்டத்தில் இருநாடுகளும் மோதிக் கொள்ளும் போக்கை உருவாக்கியுள்ளன. டிரம்பும் ஜின்-பிங்கும் இதை நிறுத்தவில்லை.அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. இது ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுடனான கேந்திரமான போர்த்தந்திர கூட்டணியில் நுழைந்தது; மேலும் சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியாவையும் தனது வளையத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இது தனது இராணுவ கூட்டணியான நேட்டோவில் இந்தியாவின் நிலையை மேம்படுத்தியது, மேலும் இந்தியாவுடனான தனது இராணுவ உறவை பலப்படுத்துகிறது. தென் சீனக் கடல், மியான்மர், பங்களா தேஷ், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் சீனா பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் விரிவடைந்து வருகிறது. இது நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்துவதோடு, இந்த நாடுகளில் துறைமுகங்களை நிர்மாணிப்பது போன்ற பணிகளுடன் அவற்றை கடற்படைத் தளங்களாகப் பயன்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக இந்த பணிகளை மேற்கொள்கிறது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவின் எல்லையில் சாலைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணித்து வருகிறது. இவை அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள் என்று சீனா வாதிடலாம். ஆனால், இவை யாவும் தங்கள் சந்தைகளை விரிவுபடுத்துவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இல்லையா?இந்த அடிப்படையில் இந்தியா பின்தங்கியிருக்கிறதா? அல்லது அதற்கான தயாரிப்புகளையும் ஆரம்பித்துள்ளதா? இல்லையா? சமீபத்திய செய்தி அறிக்கையின்படி, இந்தியாவும் உண்மையான எல்லைக்கோட்டினையொட்டி சாலைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணித்து வருகிறது. நமது எல்லைகளை பாதுகாப்பது என்பது பாராட்டத்தக்கது. சந்தோஷ் மற்றும் பிற ராணுவ வீரர்கள் எவ்வாறு இறந்தார்கள், ஆயுதமேந்தாமல் நடந்த மோதல்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை. ("இதுஇராணுவ ரகசியமாக இருக்கலாம்) ராகுல் காந்தியும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் இந்த கேள்விகளை வலியுறுத்தி கேட்டு வருகின்றனர். ஆனால் அவர்களும் தங்களிடம் உள்ள தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்கிறார்கள் - சீனா இந்திய பிராந்தியத்திற்குள் நுழைந்ததா? அல்லது இல்லையா? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவையில் இருக்கும் ஆளும் வர்க்கங்கள், தங்களிடையே உள்ள முரண்பாடுகளின் ஒரு பகுதியாக, அவர்கள் தாங்கள் மற்றவர்களை விட தேசபக்தி கொண்டவர்கள் என்று நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களாகிய நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம்: பொருளாதார மற்றும் கலாச்சார அமைப்புகளில் நம்மால் தனித்து சுதந்திரமாக நிற்க முடியாதா? அல்லது உலக வல்லரசுகளிடையே நடக்கும் சந்தைகளுக்கான போராட்டத்தில் நாம் வெறும் சிப்பாய்களாக இருக்க வேண்டுமா? எந்தவொரு இராணுவ கூட்டணியிலும் சேராமல், ஒரு குறிப்பிட்ட உலகளாவிய சக்திக்கு ஆதரவாக செயல்படாமல் நாம் சுதந்திரமாக செயல்பட முடியாதா? நம்முடைய அயலவர்களுடன் நாமாகவே சொந்த நட்புறவை வளர்த்துக் கொள்ள முடியாதா? எல்லை மோதல்களை அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாதா? இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் உண்மையான எல்லைக் கோட்டிலிருந்து, ஒப்புக் கொள்ளப்பட்ட தூரத்தை பராமரிப்பது எல்லாம் தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே; எனினும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள் ஆகும்.இந்திய மக்கள் அண்டை நாடுகளின் மக்களுடன் அமைதியையும் மற்றும் நட்புறவையும் விரும்புகிறார்கள்; ஆயுத மோதல்கள் அல்லது போர்கள் அல்ல. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகும். ஹுவான் சாங்கும் மற்றும் பா ஹியானும் (சீனப்பயணிகள்) இந்தியாவைப் பாராட்டியுள்ளனர். இந்தியாவில் தழைத்தோங்கிய புத்த மதத்தை சீன மக்கள் ஏற்றுக்கொண்டனர். சீனாவிலிருந்து பட்டு நெசவு மற்றும் அச்சிடும் நுட்பத்தை நாம் அன்புடன் ஏற்றுக்கொண்டோம். இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள விவசாயிகள் பல நூற்றாண்டுகளாக நிலையான நிலங்களை சாகுபடி செய்யும் உழைப்பின் வளமான கலாச்சாரத்தைக் கொண்டிருந்தனர். இருநாட்டு மக்களும் ஆக்கிரமிப்புக்கும் போருக்கும் எதிரானவர்கள். அவர்கள் ஒரு தன்னிறைவு மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்பை எல்லை மோதல்களால் முறித்துக் கொள்ளவும் முடியாது அப்படி நேரிட அனுமதிக்கவும் கூடாது. விஸ்வம், பொதுச் செயலாளர், மத்தியக்குழு, சி பி ஐ (எம் எல்) ஜூலை 17, 2020

இந்திய-சீன எல்லை மோதல்களில் இறந்த இராணுவ வீரர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லையில் உருவாகியுள்ள  பதட்டங்கள் நாடுகளின் விரிவாக்க அபிலாஷைகளின் விளைவாகும்  #அறிக்கை: மத்தியக்குழு,சி.பி.ஐ(எம்-எல்) நாடு என்றால் மண்ணை குறிப்பதல்ல, அந்த மண்ணில் உழைத்து, செல்வத்தை உற்பத்தி செய்து, மண்ணின் கலாச்சாரத்தை உருவாக்கும் மக்களை குறிக்கும் சொல்..  மக்களின் தேசிய உணர்வுகளை தேசியவெறி கொண்ட பேரினவாதமாக மாற்றக்கூடாது. அண்டை நாடுகளை தீயசக்திகளாக சித்தரிப்பதை தேசபக்தியுடன் இணைத்து பார்க்கும் பார்வை இருக்கக்கூடாது.  இந்து வகுப்புவாதம் என்ற நாடகத்திரையை எழுப்பிய பாஜக தேசிய பேரினவாதம் என்ற திரைச்சீலையை உயர்த்தி வருகிறது.  சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த முயற்சிக்கிறது.  இரு நாட்டு மக்களும் இந்த நிகழ்ச்சிகளின் வளர்ச்சியை மிகுந்த கவனத்துடன் கவனித்து வருகின்றனர்.  இந்திய பெரு முதலாளித்துவத்தின் தலைமை அமைதியான சகவாழ்வுக்கான பஞ்சீலம் என்ற ஐந்து கொள்கைகளை காற்றில் வீசியெறிந்ததுடன், அணிசேரா நாடுகள் என்ற கொள்கையையும் கைவிட்டு ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக 1950-களில் செயல்பட்டது.  இது தெற்காசியா மீது அம

இ.க.க.(மா-லெ)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மையக் குழு அறிக்கை உலகப்பெருந்தொற்று கோவிட்-19-ம் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியும்! கோவிட்-19 உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. மனிதகுலத்தின் ஆரோக்கியத்திற்கும் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் ஓர் தீவிரமான சவால் ஆகவும் மிக அவசரமாக கவனிக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. மக்களின் ஆரோக்கியத்தையும் உயிரையும் பாதுகாக்க தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து பணிபுரிந்து வரும் மக்கள் பிரிவினர் அனைவருக்கும், குறிப்பாக சுகாதார பணியாளர்களுக்கும்,இந்திய பொதுவுடைமை கட்சி (மா-லெ) தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது. இந்த கோவிட்-19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் குடும்பங்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நோயால் இறந்த மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கோவிட்-19 எனும் உலகப்பெருந்தொற்று சரியான முறையிலும் உரிய பலன்தரும் வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மக்களின் உயிருக்கும், ஆரோக்கியத்திற்கும் பெருங்கேடுகளை விளைவித்துவிடும்.மேலும் பல நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை